16 ஜிபி ரேம் போன்

நன்றி குங்குமம் முத்தாரம் தமிழக திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு  தவறாமல் இடம்பெறும் ஒரு விளம்பரம் ‘ஒன்பிளஸ்’ஸின் ஸ்மார்ட்போனுடையது. இந்த வருடத்தில் வரிசையாக ‘ஒன்பிளஸ் 8’, ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’, ‘ஒன்பிளஸ் 8 லைட்’ என முத்தான மூன்று...

16 ஜிபி ரேம் போன்

நன்றி குங்குமம் முத்தாரம் தமிழக திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு  தவறாமல் இடம்பெறும் ஒரு விளம்பரம் ‘ஒன்பிளஸ்’ஸின் ஸ்மார்ட்போனுடையது. இந்த வருடத்தில் வரிசையாக ‘ஒன்பிளஸ் 8’, ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’, ‘ஒன்பிளஸ் 8 லைட்’ என முத்தான மூன்று மாடல்களை அறிமுகப் படுத்தவிருக்கிறது ‘ஒன்பிளஸ்’.  முதல் தடவையாக ‘லைட்’ மாடலை அறிமுகப் படுத்துகிறது ‘ஒன்பிளஸ்’. இந்த மூன்று போன்களிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பது கசிந்துள்ளது. ஏப்ரலிலிருந்து ஜூலைக்குள் மூன்று போன்களும் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6.4 இன்ச் மெகா டிஸ்பிளே, மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி கேமரா, யூஎஸ்பிடைப் போர்ட், 4000mAh பேட்டரி திறன் என ‘ஒன்பிளஸ் 8 லைட்’ டில் உள்ள முக்கிய அம்சங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் விலை ரூ.37,400 இருக்கலாம். 8ஜிபி, 16 ஜிபி என இரண்டு வகையான ரேம்கள், 6.5 இன்ச் AMOLED  டிஸ்பிளே, 4500mAh பேட்டரி திறன், 5ஜி சப்போர்ட், ஒயர்லெஸ் சார்ஜிங் என கெத்து காட்டுகிறது ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’. 48 எம்பியில் முதன்மை கேமரா, 16 எம்பியில் இரண்டாவது கேமரா, 2 எம்பி யில் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், ஒரு செல்ஃபி கேமரா, 6ஜிபி, 8ஜிபி, 12 ஜிபி என மூன்று விதமான ரேம்கள், 128 ஜிபி, 256 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ்கள் என அசத்துகிறது ‘ஒன்பிளஸ் 8’.