2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது

ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது
ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் விநியோகம் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

 

அந்த வகையில் காரின் வெளிப்புறம் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கேஸ்கேடிங் கிரில், முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் கொண்டிருக்கின்றன.

 

உள்புறம் புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஹூண்டாயின் புதிய புளூ லின்க் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றன. இத்துடன் 4.2 இன்ச் டி.எஃப்.டி. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து என்ஜின்களும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.