2021ல் இந்தியாவில் முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கும் என தெரிவித்துள்ள அதன் சி.இ.ஓ, டிம் குக் (Tim Cook) இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய தரப்பிடம் பேசியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆப்பிள் ஆன்லைன்...

2021ல் இந்தியாவில் முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது முதலாவது விற்பனை நிலையத்தை திறக்கும் என தெரிவித்துள்ள அதன் சி.இ.ஓ, டிம் குக் (Tim Cook) இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய தரப்பிடம் பேசியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்கள் துவக்கப்படும் என்று Fox News  க்கு அளித்த பேட்டியில் டிம் குக் கூறியிருக்கிறார். அதே சமயம் அடுத்த ஆண்டு இந்தியாவில் எந்த நகரத்தில் ஆப்பிளின் விற்பனை நிலையம் திறக்கப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.கடந்த டிசம்பரில் புளோரிடாவில் சவூதி ராணுவ பயிற்சி அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான FBI  விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைப்பு அளித்த து. இதனால் டிரம்ப்-ஆப்பிள் உறவு மேம்பட்டுள்ள நிலையில்,  டிரம்ப் இந்திய தரப்பிடம் பரிந்துரைத்தார் என்று கூறப்படுகிறது.