8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதுமில்லை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத இருப்பதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட...

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதுமில்லை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத இருப்பதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது. பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக பேசியவருக்கு விமானத்தில் பறக்க தடை  5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அத்துடன் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என தமிழக அரசு தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.