விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் விற்பனையில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 
தற்சமயம் இதன் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருக்கிறது. 

 ஹோண்டா அமேஸ்
ஏப்ரல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஹோண்டா அமேஸ் மார்ச் 2018 வரை 2.8 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதன் இரண்டாம் தலைமுறை மாடல் மே 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இதுவரை 1.4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 
ஹோண்டா அமேஸ் மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐ-விடெக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வசதி ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

Click here to join
Telegram Channel for FREE