ரூ.99 செலுத்தி ‘ஜியோ போன் 2’ வாங்கலாம் : மாதம் ரூ.141 இ.எம்.ஐ

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ போன் 2’ என்ற செல்போனை மாதத்தவனை ரூ.141 செலுத்தும் சலுகையில் வாங்கிக்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.99 செலுத்தி ‘ஜியோ போன் 2’ வாங்கலாம் : மாதம் ரூ.141 இ.எம்.ஐ

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ போன் 2’ என்ற செல்போனை மாதத்தவனை ரூ.141 செலுத்தும் சலுகையில் வாங்கிக்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனமும், அதன் ஜியோ நெட்வொர்க்கும் அடிக்கடி புதிய ஆஃபர்களை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி ‘ஜியோ போன் 2’ என்ற செல்போனை ரூ.99 செலுத்தி 3 லிருந்து 5 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்பின்னர் மாதம் ரூ.141 இ.எம்.ஐ செலுத்தினால் போதும் எனப்பட்டுள்ளது. ஆனால் கிரிடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சில நாட்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ போன் 2-வுடன் ஜியோ சிம் ஒன்றும் ரூ.99 செலுத்தி பெறலாம் எனப்பட்டுள்ளது. இந்த சிம் மூலம் 14 ஜிபி டேட்டா மற்றும் இலவச போன் அழைப்புகளை 28 நாட்களுக்கு பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 300 எஸ்.எம்.எஸ்-களும் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

image

2.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஜியோ போன் 2, ஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. வாட்ஸ் அப், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட சேவைகளை இதில் பயன்படுத்த முடியும். 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்டது. 2000 எம்ஏஎச் பேட்டரி திறன் இந்த போனை 24 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.2,999 ஆகும்.


Click here to join
Telegram Channel for FREE