பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினா கம்ஃபோர்டெக் இந்தியாவில் ரூ.46,656 என நிர்ணயம் செய்யப்பட்டு, நாட்டில் உள்ள விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. 

புதிய பிளாட்டினா கம்ஃபோர்டெக் மாடலில் பகலில் எரியும் புதிய எல்இடி மின்விளக்கு சரியாக ஹெட்லைட்டின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. புதிய எல்இடி DRL வாகனத்தின் ஹெட்லைட்டில் ஆட்டோ ஹெட்லைட் ஆன் அம்சத்தை நீக்குகிறது. இதனால் ஆட்டோ ஹெட்லைட் ஆன் அம்சம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பேட்டரி திறன் அதிகபட்சம் 88 சதவிகிதம் வரை சேமிக்க வழிசெய்கிறது.

\"\"

மெக்கானிக்கல் அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் 102 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 7.8 bhp மற்றும் 8.3 Nm செயல்திறன், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மணிக்கு 90 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ள பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் லிட்டருக்கு 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

புதிய பிளாட்டினாவில் வழங்கப்பட்டுள்ள கம்ஃபோர்டெக் தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு அதிகப்படியான சவுகரியத்தையும், சீரான அனுபவத்தை வழங்கும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. பிளாட்டினா கம்ஃபோர்டெக் அலாய் வீல், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி மற்றும் எபோனி பிளாக் மற்றும் காக்டெயில் வைன் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.