புத்தகம் வாசித்தால் மன அழுத்தம் குறையும்

புத்தகம் வாசித்தால் மன அழுத்தம் குறையும்

புத்தகம் வாசிப்பது நல்லப் பழக்கம் என்று பல அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு காலம் புத்தகம் வாசிப்பது என்பது அறிவை வளர்க்கத் தான் பயன்படும் என்று அனைவரும் நம்பி வந்தனர். ஆனால், அறிவை மட்டுமல்ல, மன நலத்தையும் மேம்படுத்த புத்தகங்கள் உதவுகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
\"\"
 
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிஸின் பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர் பிரையன் பிரைமேக் தலைமையிலான குழு இது குறித்து ஆய்வை நடத்தியது. அதில், டீன்-ஏஜ் பருவத்தை அடைந்த 106 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் இசை, திரைப்படங்கள் அல்லது டி.வி., நாளிதழ்கள், இணைய தளம், புத்தகங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
அதில் 2 மாதங்களில் 60 முறை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வில் இசையை மிக குறைவாக கேட்பவர்களுடன் ஒப்பிடும் போது இசையை அதிகமாக கேட்கும் இளம் வயதினர் 8.3 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்பது தெரிய வந்தது.
 
அதே வேளை, குறைவாக புத்தகங்களை வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது, புத்தகங்களை அதிகம் வாசிப்போர் 10-ல் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போது பிற ஊடகங்களின் மீது கவனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் பிரைமேக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.