ஹோன்டா டியோ டீலக்ஸ் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா டியோ டீலக்ஸ் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஹோன்டா டியோவின் டாப் என்ட் மாடலை வெளியிட்டுள்ளது. ஹோன்டா டியோ டீலக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்கூட்டர் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
 
அந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக புதிய எல்இடி ஹெட்லேம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 4-இன் ஒன் இக்னிஷன் கீ உள்ளிட்டவை இருக்கிறது. இதே போன்ற யூனிட் ஹோன்டா கிரேசியா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மற்ற அம்சங்களை பொருத்த வரை வாடிக்கையாளர்கள் விரும்பினால் தேர்வு செய்யும் மொபைல் போன் சார்ஜிங் பாயின்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மார்ஷல் மெட்டாலிக் கிரீன் மற்றும் ஆக்சிஸ் மெட்டாலிக் கிரே என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் ரிம்களில் தங்க நிறம் பூசப்பட்டு ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
 
 
புதிய டியோ டீலக்ஸ் ஸ்கூட்டரிலும் 109 சிசி சிங்கிள்-சிலின்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பிஹெச்பி பவர் @7000 ஆர்பிஎம் மற்றும் 8.91 என்எம் டார்கியூ @5500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் கன்டினிவஸ் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் மணிக்கு 83 கிலோமீட்டரில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹோன்டா டியோ டீலக்ஸ் மாடலில் இருசக்கரங்களிலும் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் மற்றும் ஹோன்டாவின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (CBS) வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் டியோ மாடல்களில் கட்டாயம் வழங்கப்படும் அம்சங்களில் ஒன்றாக இருக்கின்றன.
 
இந்தியாவில் ஹோன்டா டியோ டிவிஎஸ் வீகோ, சுசுகி லெட்ஸ், ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் யமஹா ரே ZR உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய ஹோன்டா டியோ டீலக்ஸ் இந்த மாதமே விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹோன்டா டியோ டீலக்ஸ் விலை இந்தியாவில் ரூ.53,292 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹோன்டா டியோ பேஸ் வேரியன்ட் மாடலை விட ரூ.3000 வரை அதிகம் ஆகும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.