சுசுகி V-ஸ்டார்ம் 1000: விரைவில் வெளியாகும் என தகவல்

சுசுகி V-ஸ்டார்ம் 1000: விரைவில் வெளியாகும் என தகவல்

பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி இந்தியாவில் புதிய V-ஸ்டார்ம் 1000 பைக்கினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சர்வதேச சந்தையில் இரண்டு மாடல்கள் ஸ்டாண்டர்டு V-ஸ்டார்ம் 1000 மற்றும் V-ஸ்டார்ம் XT அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்தியாவில் V-ஸ்டார்ம் XT மாடல் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 
புதிய மாடல் சுசுகி V-ஸ்டார்ம் மாடலின் மேம்ப்டுத்தப்பட்ட மாடல் ஆகும். இதில் புதிய வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் இன்ஜின் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. 
 
புதிய ஸ்போக்டு வீல், ஹேண்டிள்பார் மற்றும் பெரிய டையாமீட்டர் கொண்ட V-ஸ்டார்ம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் டையர்கள் மாற்றியமைக்கப்பட்டு முன்பக்கம் 19-இன்ச் மற்றும் பின்பக்கம் 17-இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டையர்களும் டூயல்-ஸ்போர்ட் டியூப்லெஸ் வகையை சேர்ந்தது ஆகும்.  
 
\"\"
 
புதிய V-ஸ்டார்ம் 1,037 சிசி லிக்விட்-கூல்டு, V-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 98 bhp மற்றும் அதிகபட்சம் 103 Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் உச்சகட்ட டார்கியூ நிமிடத்திற்கு 4,000 அளவு குறைவாக இருப்பதோடு 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 
 
புதிய V-ஸ்டார்ம் 1000 மோஷன் டிராக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்க ஏதுவாக ஐந்து-ஆக்சிஸ் கொண்ட இனெர்ஷியல் மெஷர்மென்ட் யுனிட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரேக்கிங் பாதுகாப்பாகவும், சாதாரண ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் சிறப்பாக வேலை செய்யும். 
 
இந்தியாவில் தற்சமயம் சுசுகி V-ஸ்டார்ம் 1000 விலை ரூ.13.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.