ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி. ரூம்ஸி (ID. ROOMZZ1) கான்செப்ட் கார் மாடலை ஆட்டோ ஷாங்காய் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐடி குழுமத்தின் புதிய காராக ஐடி. ரூம்ஸி இருக்கும் என்றும் இது புகை வெளியிடாத எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது.

 

ஐடி. ரூம்ஸி சார்ந்து உருவாகும் கார் 2021 ஆம் ஆண்டு வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன்பின் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என  தெரிகிறது. காம்பேக்ட் ஐடிஐ, ஐடி குரோஸி, ஐடி புஸி, ஐடி விஸோனி மற்றும் ஐடி புஃகி1 வரிசையில் உருவாகும் ஆறாவது எலெக்ட்ரிக் கார் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

 

 

ஐடி. ரூம்ஸி காரின் உள்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த காரில் புதுவித இருக்கை அமைப்பு, உயர் ரக மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் கஸ்டமைஸ் செய்யக்கூடிய மின்விளக்கு அமைப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் ஐ.கியூ. டிரைவ் சிஸ்டம்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

 

ஐடி. பைலட் மோட் கொண்டு வாகனம் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும். இது தானியங்கி வாகனம் போன்றும் பயன்படுத்த முடியும். இந்த கார் மோட்டார் பற்றிய விவரங்கள்  ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், இதுபற்றிய விவரங்களை 2019 ஷாங்காய் ஆட்டோ விழாவில் எதிர்பார்க்கலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.