ஃபோர்டு இகோஸ்போர்ட் விலையில் ரூ.1,00,000 வரை தள்ளுபடி

ஃபோர்டு இகோஸ்போர்ட் விலையில் ரூ.1,00,000 வரை தள்ளுபடி

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல சப்-காம்பாக்ட் SUV மாடலாக இருக்கும் இகோஸ்போர்ட் புதிய எடிஷன் நவம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைதொடர்ந்து புதிய இகோஸ்போர்ட் மாடல்கள் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு விற்பனை மையங்களில் விநியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. 

புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் வெளியாக இருப்பதை தொடர்ந்து தற்போதைய இகோஸ்போர்ட் மாடல் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பிரீ-ஃபேஸ்லிஃப்ட் இகோஸ்போர்ட் மாடல் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. 

தள்ளுபடி மட்டுமின்றி விற்பனையாளர்கள் சார்பில் சலுகைகள், நிதியுதவி, எக்சேஞ்ச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஸ்டாக் இருப்பு இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களின் விலை தற்சமயம் ரூ.7.31 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் நான்கு ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் பெற இருக்கிறது. காம்பாக்ட் SUV மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று, இந்தியாவில் செப்டம்பர் 2017-இல் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.

புதிய இகோஸ்போர்ட் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017 இகோஸ்போர்ட் மாடலில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டின் SYNC 3 மென்பொருள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, குரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், பின்புற கேமரா மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் இகோஸ்போர்ட் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின், 123 hp மற்றும் 6,500 rpm, 150 Nm டார்கியூ 4,500 rpm செயல்திறன் கொண்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 1.5 லிட்டர் Ti-VCT இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இகோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின் கொண்டிருக்கிறது. 

புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் முன்பதிவுகள் நாட்டின் அனைத்து ஃபோர்டு விற்பனையாளர்களிடமும் நடைபெறுகிறது. முன்பதிவு செய்வோர் ரூ.30,000 எனும் முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.