அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்

அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு ஜெயின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கேலக்ஸி S8, S8 பிளஸ், நோட் 8, எல்ஜி கியூ6, விவோ V7 பிளஸ், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL போன்று Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது.
 
சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை CNY3,299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,300 என்றும், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY3599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,300 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY3999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

\"\"

சியோமி Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4500 எம்ஏஎச் பேட்டரி 
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் மற்றும் முக அங்கீகார (facial recognition) வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியவில் சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.