அசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்

அசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிரான்டு ஹானர் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
செயற்கை நுண்ணறிவு 2.0 தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. இரட்டை கேமரா வடிவமைப்பு, முன்பக்க டிஸ்ப்ளே நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 சர்வதேச வெளியீடு லண்டனில் மே 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.
 
புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும். ஆடியோவை பொருத்த வரை ஹானர் 10 ஸ்மார்ட்போனில் 7.1 மல்டி-சேனல் ஹைஃபை ஆடியோ சிப் வழங்கப்பட்டுள்ளது. இது 7-சேனல் ஆடியோ எஃபெக்ட்களை வழங்குகிறது.
 
 
 
ஹானர் 10 சிறப்பம்சங்கள்:
 
 
- 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
- மாலி-G72 MP12 GPU
- 6 ஜிபி ரேம்
- 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 24 எம்பி செல்ஃபி கேமரா
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- கைரேகை சென்சார்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3400 எம்ஏஹெச் பேட்டரி
- குவிக் சார்ஜிங் வசதி
 
சீனாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை CNY2,999 இந்திய மதிப்பில் ரூ.27,231 என்றும் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY2999 இந்திய மதிப்பில் ரூ.31,422 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

 

புகிய ஹானர் 10 ஸ்மார்ட்போன் பிளாக், டீல் மற்றும் ட்விலைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 27-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை ஹூவாய் மால் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் நடைபெற இருக்கிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.