அசத்தல் கேமரா கொண்டு தயாராகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: முழு தகவல்கள்

அசத்தல் கேமரா கொண்டு தயாராகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் இதுவரை நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் நோக்கியா 7, நோக்கியா 8 என  அழைக்கப்படலாம் என்றும் இவற்றில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. 
 
மேலும் நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இத்துடன் இவற்றில் கார்ல் செய்ஸ் லென்ஸ் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. இத்துடன் நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா மட்டுமே வழங்கப்படும். 
 
\"\"
 
முன்னதாக வெளியான தகவல்களில் ஒரு ஸ்மார்ட்போனில் சிறிய டிஸ்ப்ளே மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷனும், பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனில் QHD ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகின்றது. 
 
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்னும் துவங்காத நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.