அதிநவீன எதிர்கால அம்சங்கள் நிறைந்த ஆடி A8 அறிமுகம்

அதிநவீன எதிர்கால அம்சங்கள் நிறைந்த ஆடி A8 அறிமுகம்

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி புதிய செடான் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற ஆடி சர்வதேச நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆடி A8 நான்காவது தலைமுறை மாடலில் புதிய வெளிப்புற வடிவமைப்பு மற்றும் புத்தம் புதிய உள்வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 
 
எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் கனெக்டிவிட்டி என புத்தம் புதிய ஆடி A8 லெவல் 3 தாணியங்கி முறை (ஆட்டோனோமஸ் டிரைவிங்) வசதி கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் லெவல் 3 தாணியங்கி முறையில் இயங்கும் முதல் கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதுதவிர எதிர்கால தாணியங்கி முறையில் செல்லும் திறன்களையும் ஆடி A8 கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்க்கிங் பைலட், டிராஃபிக் ஜாம் பைலட் உள்ளிட்ட வசதிகள் ஆடி A8 மாடலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்ததை போன்று ஆடி A8 குவாட்டரோ டிரைவ்லைன் மற்றும் வழக்கமான ஆல்-வீல்-டிரைவ் வசதிகளை கொண்டுள்ளது. 
 
\"\"
 
புரோலோக் கான்செப்ட்டை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள வெளிப்புறங்களில் முன்பக்கம் சிங்கிள்-ஃபிரேம் கிரிள் மற்றும் லேசர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றத்தை பொருத்த வரை முந்தைய மாடல்களில் இருந்து அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்களுடன் பகல் நேரத்திலும் வேலை செய்யும் லைட் வடிவைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
புதிய ஆடி காரில் ஸ்ப்லிட் 5 ஸ்போக் அல்லாய் வீல்ஸ் வழங்கப்பட்டிருந்தாலும், மற்ற வகை வடிவமைப்புகளை தேர்வு
செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நீலத்தை பொருத்தவரை 5170 மில்லிமீட்டர் மற்றும் கூடுதலாக 130 மில்லிமீட்டர் நீலம் கொண்ட ஆடி A8L என புதிய ஆடி A8 இருவித லென்த் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. எனினும் இந்தியாவில் வழக்கமான ஆடி A8L மாடல் மட்டுமே வெளியிடப்படும். 
 
ஆங்கில்டு பின்புறத்தில் புதிய டெயில் லேம்ப் வடிவமைப்பு மற்றும் என்ட்-டூ-என்ட் டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதில் OLED தொழில்நுட்பம் இருப்பதால் மென்மையான லைட்டிங் வழங்குகிறது. இதேபோன்ற டெயில் லேம்ப் வடிவமைப்பு மற்ற ஆடி மாடல்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
\"\"
 
எளிமையான காக்பிட் வடிவமைப்பு மற்றும் கிடைமட்ட வடிவமைப்பு கொண்ட டேஷ்போர்டு கொண்டுள்ளது. பெரும்பலான A8 அம்சங்களை இயக்க ஸ்கிரீன் சார்ந்த கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன்களும் உள்புற கருப்பு நிறத்திற்கு ஏற்ப ஆஃப் ஆகிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் கிளாஸ் பிளாக் மேற்பரப்புகளின் மேல் மரத்தாலான அக்சென்ட் வழங்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் புதிய ஸ்டியரிங் மற்றும் வீல் வடிவமைப்பு இதுவரை பார்த்திடாத ஒன்றாக இருக்கிறது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டியரிங் வீல் ஸ்டியரிங் மவுண்ட்டெட் டச் கண்ட்ரோல் மற்றும் சில்வர் அக்சென்ட்களை கொண்டுள்ளது. 
 
ஆடம்பர செடான் மாடல் என்பதால் புதிய ஆடி A8 பின்புற இருக்கைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் A8L மாடலில் \'ரிலாக்சேஷன் சீட்\' தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வகை சீட் நான்கு விதங்களில் நம் வசதிக்கு ஏற்ப செட் செய்து கொள்ளும் வசதியும், ஃபூட்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஃபூட் ரெஸ்ட் போன்று இல்லாமல் கால்களுக்கு மசாஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதே வசதிகள் முன்பக்க பேசன்ஜர் சீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
பின்பக்க இருக்கைகளில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ரீடிங் லேம்ப்கள், சீட் மசாஜர், கூலர்கள் OLED டிஸ்ப்ளேவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த OLED  டிஸ்ப்ளே ரிமோட் கண்ட்ரோல் போன்று வேலை செய்து இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்புகளை இயக்கவும் வழி செய்கிறது. 
 
ஆடி A8 6-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளது. ஆடி A8 ஹைப்ரிட் அல்லது எலெக்ட்ரிஃபைடு பதிப்பும் வெளியிடப்படலாம் என்ற நிலையில் புதிய A8 விலை ரூ.1 கோடியில் இருந்து துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய மாடல் அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.