அதிரடி தோற்றம் கொண்டு உருவாகும் அபாச்சி RR310S

அதிரடி தோற்றம் கொண்டு உருவாகும் அபாச்சி RR310S

2017-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக இருக்கும் டி.வி.எஸ். அகுலா அல்லது டி.வி.எஸ். அபாச்சி RR310S தற்சமயம் தயாரிப்பு பணிகளில் இருக்கிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் RTR200 மாடல் வெளியானதைத் தொடர்ந்து புதிய மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரூ.1.0 லட்சம் முதல் துவங்கும் RTR200 அதிக விருதுகளை வாங்கி குவிப்பதோடு, விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
புதிய அபாச்சி RR310S மாடலின் மூலம் முற்றிலும் மறைக்கப்பட்ட வடிவமைப்புடன் வெளிவரும் முதல் பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது. இத்துடன் துவக்க நிலை பைக்களுக்கு புதிய பைக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 
டி.வி.எஸ். அபாச்சி RR310S டெஸ்டிங் செய்யப்படும் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இம்முறை பைக்கின் காப்புரிமை புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய புகைப்படங்களில் மாடலின் தோற்றம் ஓரளவு தெரியவந்துள்ளது. கூர்மையான முக அமைப்பு கொண்ட புதிய மாடலில் ட்வின்-ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி யுனிட்களுடன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. 
 
\"\"
 
வடிவமைப்பின் பின்புறத்தில் சிறிய துளைகள் காணப்படுகிறது, இத்துடன் ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் மோனோஷாக் ஸ்ப்ரிங் உள்ளிட்டவை பைக்கினை அழகாக வெளிப்படுத்துகிறது. முன்பக்கம் காணப்படும் பெரிய விண்ட்ஸ்கிரீன் முகத்தில் காற்று கிழிப்பதை தடுக்கும். மேலும் மிகப்பெரிய பெட்ரோல் டேன்க் அதிக கொள்ளளவு வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்கள் பைக்கினை நெடுந்தூரம் எடுத்துச் செல்ல ஏற்றதாக மாற்றுகிறது. 
 
ஸ்ப்லிட் சீட் அமைப்பு தற்போதைய ட்ரென்ட் அம்சத்திற்கு ஏற்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இத்துடன் அலாய் வீல்களும், பி.எம்.டபுள்யூ மாடல்களில் வழங்ப்படுவதை போன்ற எக்சாஸ்ட் மஃப்ளர் கொண்டுள்ளது. மேலும் முன்பக்கம் கோல்டு நிறம் கொண்ட யு.எஸ்.டி. ஃபோர்க் ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. 
 
பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் வழங்கப்பட்ட ஃபிரேம், யு.எஸ்.டி. முன்பக்க ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை டி.வி.எஸ்.ய நிறுவனத்தின் ஓசுர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பி.எம்.டபுள்யூ. G 310 R-இன் 313சிசி லிக்விட் கூல்டு, ஃபியூயல்-இன்ஜெக்ட்டெட், சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34ps செயல்திறனை 28Nm டார்கியூ கொண்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை இரண்டு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் மற்றும் ABS கூடுதல் அம்சமாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
டி.வி.எஸ். அபாச்சி RR310S மாடலின் வெளியீடு தாமதமாகியுள்ளது என்றும், புதிய மாடல் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டு.வி.எஸ். அபாச்சி RR310S மாடலின் விலை இந்தியாவில் ரூ.2.0 லட்சம் முதல் துவங்கும் என்றும் இந்தியாவில் கே.டி.எம். RC 390 மற்றும் ஹோன்டா CBR250R மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.