அமிர்தத்துக்கு இணையான தண்ணீர்

அமிர்தத்துக்கு இணையான தண்ணீர்

புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முன்வரும் அமாவாசை வரையுள்ள காலம் மஹாலயபட்சம் எனப்படும். இந்த 15 நாட்களும் பித்ருக்கள் பூமிக்கு வந்து, வழிபடுகிறோமா என்று பார்ப்பார்களாம். ஆகவே 15 நாட்களிலும் தர்ப்பணம் செய்வர். வழிபாடு நடத்துவர்.

தட்சிணாயணகாலம் விசர்க்காலம் எனப்படும். மழைபொழியும் இக்காலத்தில் உடலில் உயிர்ச்சத்துக்களுக்கு பாதிப்பு இருக்காது. உடல் பலம் அதிகமாக இருக்கும்.
இந்நாட்களில் பகல் நீளமாகவும், இரவு குறுகியும் இருக்கும். ஆகவே பகல் சாப்பாட்டுக்குபின் குட்டித்தூக்கம் போடலாம். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவைகள் அதிகமாக இருக்கும். 

ரிதுசந்தி

பருவமாற்றத்துக்கான ஒரு தேதியை குறித்து, அக்குறிப்பிட்ட நாளில் பருவம் மாறிவிட்டது என்று கூறமுடியாது. பழக்கவழக்கங்களை மாற்றுவதும் கூடாது. வெயில் காலம் முடிந்து மழை தொடங்குவதற்கான கடைசி ஒரு வாரத்தில் வெயில் காலம் பழக்கங்களை குறைத்துக் கொண்டே வந்து, அடுத்த ஒரு வாரத்தில் மழைக்கால பழக்கங்களை பழகி கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலம் குதுசந்தி எனப்படும். இச்சமயத்தில் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்வது நல்லது. பாட்டி வைத்தியமாக விளக்கெண்ணை கொடுப்பர்.

இந்தியாவின் 6 பருவ நிலைகள்

ஹேமந்தருது - முன்பனிக்காலம் - கார்த்திகை, மார்கழி - மனிதபலம் அதிகபட்சம்.
சிசிரருது - பின்பனிக்காலம் - தை, மாசி - அதிகபட்ச மனிதபலம்.
வசந்தருது - வசந்தகாலம் - பங்குனி, சித்திரை - மத்திமமான மனிதபலம்
கிரீஷ்மருது - வெயில் காலம் - வைகாசி, ஆனி - மிக குறைந்த மனிதபலம்
வர்ஷிரது - மழைக்காலம் - ஆடி, ஆவணி - மத்திமமான மனிதபலம் 
சரத்ருது - இலையுதிர் காலம் - புரட்டாசி, ஐப்பசி -
ஹேமந்தருது சர்யா (முன் பனிக்காலம்)

இப்பருவத்தில் மக்கள் பலமுள்ளவர்களாக இருப்பர். செரிமான சக்தி அதிகமாக இருக்கும். நெருப்பு தன்னருகே உள்ள பொருட்களை விழுங்குவது போல ஜடராக்னி உடலில் உள்ள திசுக்களை கூட விழுங்கி விடும். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகளை உண்ண வேண்டும்.

இரவு நீண்டிருப்பதால் அதிகாலையில் பசி அதிகரித்து, வாதத்தை தூண்டும். ஆகவே எண்ணெய் தேய்க்கலாம்.

வெதுவெதுப்பான நீரையே குடிக்க, குளிக்க பயன்படுத்த வேண்டும்.

சிஷிரருது (பின்பனிக்காலம்)

இந்த பருவத்திற்கான நிலைப்பாடுகள் முந்தைய காலத்தை போலவே இருக்கும். இன்னும் சற்று அதிக வேகத்தில் இருக்கும். (குளிரும், வறண்ட தன்மையும் கடுமையாக இருக்கும்).

வசந்த ரிதுசர்யா (வசந்த காலம்)

குளிர்காலத்தில் அதிகம் உண்டான கபம், வசந்த காலத்தில், வெயில் காரணமாக உருகத் தொடங்கும். பசி (அக்னி) குறையும். ஆகவே கபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும். உணவு, கபத்தை குறைப்பதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், கொழுப்பு சத்து குறைந்ததாகவும், நீர்ச்சத்து குறைந்ததாகவும் இருக்கவேண்டும்.

உடற்பயிற்சி செய்யலாம். பொடி தேய்ப்பு செய்யலாம். குளிர்ந்த உணவுகள், இனிப்பு, புளிப்பு, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கபத்தை அதிகரிக்கும். ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

பகலில் தூங்கக்கூடாது
க்ரீஷ்ம ரிது (வெயில் காலம்)
சூரிய கதிர் அதிக வெப்பமுடையதாக இருக்கும்.

கபம் குறையத் தொடங்கும். வாதம் கூட தொடங்கும். ஆகவே உப்பு, காரம், புளிப்புசுவை உள்ள உணவுகளை அதிகம் உண்ணல்
திரவ உணவுகள், குளிர்ந்த உணவுகள், இனிப்பு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.
அதிக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது வெளியே செல்லக்கூடாது.
வர்ஷரிது (மழைக்காலம்)
ஜடராக்னி வெயிலில் குறைய தொடங்கியது. இப்போது அதிகம் குறைந்து விடும்.

நீர்நிறைந்த மேகங்கள், குளிர்ந்தகாற்று, பூமியின் கதகதப்பு ஆகியவற்றால் தோஷங்களின் சமன்பாடு குறையும்.
தோஷங்களின் சமன்பாட்டை சீராக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
வெயிலின் தாக்கம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஆற்று தண்ணீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் உணவு எளிதில் செரிமானம் ஆக கூடியதாக இருக்க வேண்டும். 
அதிகம் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

ஷரத்ரிது (குளிர்காலம்)

மழைக்கால குளிருக்கு மனிதன் பழக்கப்பட்டு விடுவான். குளிரில் இருந்து சூரிய வெப்பத்துக்கு மாறும்போது பித்தம் அதிகமாகும். கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி, பயிறு, சர்க்கரை, தேன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
பனியில் போகக்கூடாது.

ஹம் ஸோதகம் (குளிர்காலத்தில் தண்ணீரை சுத்தப்படுத்துதல்)

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை பகலில் வெயிலிலும், இரவில்சந்திரனின் கதிர்கள் படும்படியாகவும், சில நாட்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தண்ணீரில் இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படும். சுத்திகரிக்கப்படும். மலங்களை அழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். இத்தகைய தண்ணீரை அகஸ்திய நட்சத்திரம் அது அமிர்தத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது. இதை குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

பருவங்களின் போது பயன்படுத்தும் உணவுகளின் சுவையும், குணமும்.
சிஷிரரிது (குளிர், பனி) - இனிப்பு, உப்பு, புளிப்புச்சுவை - சூடுள்ள உணவுகள்.
வசந்தரிது (வசந்தகாலம் ) - கசப்பு, துவர்ப்பு, காரச்சுவை - சூடுள்ள உணவுகள்
கிரிஷ்மரிது (வெயில் காலம்) - இனிப்பு சுவை - குளிர்ந்த உணவுகள்.

வர்ஷரிது (மழைக்காலம்) - இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை - சூடுள்ளவை. சீசன் முடியும் போது குளிர்ந்தவை.

விரத்ரிது (குளிர்காலம்) - இனிப்பு, கசப்பு, சுவை ஹேமந்தரிது (முன்பனிக்காலம்) - இனிப்பு, உப்பு, புளிப்பு சுவை - சூடுள்ள உணவுகள். தினமும் அறுசுவைகளும் நிரம்பிய உணவை சாப்பிடுவது உடல் நலத்தை சீராக பாதுகாக்க உதவும். குறிப்பிட்ட பருவங்களின் போது, அந்த காலத்துக்குரிய சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-4322888, 2367200)

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.