அமேசானுக்கு போட்டியாக ப்ளிப்கார்ட் விற்பனை திருவிழா: தேதி மற்றும் சலுகைகள் அறிவிப்பு

அமேசானுக்கு போட்டியாக ப்ளிப்கார்ட் விற்பனை திருவிழா: தேதி மற்றும் சலுகைகள் அறிவிப்பு

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இந்தியாவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் அறிவிப்பை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளமும் தனது சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. 
 
அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஆகஸ்டு 9-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 12-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதே போன்று ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை ஆகஸ்டு 9-ம் தேதி துவங்கி ஆகஸ்டு 11-ம் தேதி நிறைவு பெறுகிறது. 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஹெட்போன் போன்ற சாதனங்கள் மட்டுமின்றி சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை 72 மணி நேரம் நடைபெற இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 10 சதவகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
\"\"
 
ப்ளிப்கார்ட் சிறப்பு தள்ளுபடி:
 
ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படாத நிலையி்ல், சில சாதனங்களுக்கான விலையில் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.15,999 மற்றும் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோ எம் மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதேபோல் லெனோவோ K5 நோட் விலையில் ரூ.2,499 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999க்கும், லெனோவோ K6 பவர் விலையில் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,000 இல் இருந்து ரூ.48,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 32 ஜிபி ஐபோன் 6 விலையிலும் தள்ளபடி செய்யப்படுகிறது. 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் சியோமி ரெட்மி நோட் 4 வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதவிகிதம் அதிக விலைக்கு எடுத்துக் கொள்ள முடியும். 
 
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தொலைகாட்சி, லேப்டாப், டேப்லெட் மற்றும் இதர மின்சாதனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஹவர் டீல்ஸ்களுக்கான ஸ்பாட்லைட் விற்பனை நடைபெறுகிறது. இதில் தொலைக்காட்சி மாடல் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பிரத்தியேக வெளியீடுகள் சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.