அமேசான் கிரேட் இந்தியன் சேல்: அதிரடி சலுகைகள், முழு தகவல்கள்

அமேசான் கிரேட் இந்தியன் சேல்: அதிரடி சலுகைகள், முழு தகவல்கள்

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் இன்று (ஆகஸ்டு 09) துவங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு விற்பனையில் பல்வேறு மின்சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 
 
அமேசான் வழக்கமாக வழங்கும் சலுகைகளை தவிர அமேசான் செயலி மூலம் பொருட்களை வாங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 15 சதவிகிதம் கேஷ்பேக், இணையதளம் மூலம் வாங்குவோருக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
இத்துடன் அமேசான் பே மூலம் பணம் செலுத்துபவர்கள் இந்தோனேஷியாவில் உள்ள பாலி சென்று வரும் வாய்ப்பை வெல்ல முடியும். அமேசானில் பொருட்களை வாங்கும் முன் உங்களது அமேசான் பே கணக்கை ரீசார்ஜ் செய்வது நல்லது. இவ்வாறு செய்யும் போது கூடுதல் கேஷ்பேக் பெற முடியும்.  
 
சிறப்பு விற்பனையில் பழைய சாதனங்களை எக்சேஞ்ச் செய்து புதிய பொருட்களை வாங்க முடியும். இந்த சலுகை லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கும் வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவணை வசதி 30,000க்கும் அதிகமான பொருட்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த சலுகை அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.
 
\"\"
 
32 ஜிபி ஐபோன் 7
 
இந்தியாவில் ஐபோன் 7 விலை மீண்டும் குறைந்துள்ளது. 32 ஜிபி ஐபோன் 7 தற்சமயம் ரூ.42,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.56,200 என நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை வசதியும் வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு 15 சதவிகிதம் கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
 
128 ஜிபி ஐபோன் 7 பிளஸ்
 
 
இந்தியாவில் ரூ.76,300க்கு விற்பனை செய்யப்பட்ட 128 ஜிபி ஐபோன் 7 பிளஸ் தற்சமயம் ரூ.62,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டை பொருத்த வரை ஐபோன் 7 பிளஸ் விலை இந்தளவு குறைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். 
 
 
ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3 இன்ச்
 
 
2017 மேக்புக் ஏர் 13.3 இன்ச் மாடல் ரூ.77,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சிறப்பு விற்பனையில் இதன் விலை ரூ.58,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தடன் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்ட மேக்புக் ஏர் 128 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்படுகிறது.
 
 
32 ஜிபி ஐபோன் SE
 
 

 

இந்தியாவில் ரூ.26,000க்கு விற்பனை SE தற்சமயம் ரூ.19,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் SE 12 எம்பி பிரைமரி கேமரா, 1.2 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் A9 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.