அழகிய வீடு...ஆனந்தமான வாழ்க்கை!

அழகிய வீடு...ஆனந்தமான வாழ்க்கை!

நம்மை அலங்கரித்துக் கொள்வது போன்று நம்முடைய வீட்டையும் அலங்கரித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் மகிழ்ச்சி தரும்.

நீங்கள் குடியிருக்கும் வீடு அளவில் பெரியதாக இருந்தால் தான் அதனை அழகாக வடிவமைக்க வேண்டும் என்பதில் அவசியமில்லை.

நீங்கள் வாழும் வீட்டை உங்கள் ரசனைக்கேற்பவாறு வடிமைத்து வாழுங்கள், ஆனந்தம் குடிகொள்ளும்.

இயற்கை காட்சிகள்

வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனதிற்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இயற்கை காட்சிகளை மாட்டி வையுங்கள்.

சுவரில் இயற்கைக் காட்சிகளின் படம் அல்லது குழந்தைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இவை பார்த்தவுடன் உற்சாகத்தை தரும்.

சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.

அழகான பெயின்டிங் உள்ள காலண்டர்களை தூக்கிப்போடாமல் ப்ரேம் போட்டு நீங்கள் அமர்ந்து சாப்பிடும் அறையில் மாட்டலாம்.

சமையலறை அழகு

சமையலறை அலமாரியில் எவர்சில்வர் டப்பாக்கள் அடுக்குவதை தவிர்த்து, ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி அடுக்கி வைக்கலாம்.

டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர்வேஸோ அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம்.

டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது. பூஜை அறைக்கு என்று இடம் இல்லாதவர்கள் சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த பூஜைக்கான இடம் அமைக்கலாம்.

படுக்கையறை அழகு

படுக்கை அறையின் அழகை கெடுப்பது ஒழுங்காக வைக்கப்படாத தலையணை, போர்வைகள்தான்.

படுக்கையறையில் உள்ள அலமாரியில் தலையணைகளை அடுக்கிவிடுங்கள், மேலும் மெத்தையின் மேற்புறத்தில் விரிக்க பயன்படுத்தும், போர்வையை நல்ல பூ போட்டதாக பார்த்து வாங்குங்கள்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும், வீட்டில் கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருந்தால் அதுவே தனி அழகுதான்.

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.