ஆஃப்லைனில் விற்பனைக்கு வந்த மோட்டோ எம் ஸ்மார்ட்போன்

ஆஃப்லைனில் விற்பனைக்கு வந்த மோட்டோ எம் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எம் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் வர்த்தகர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யபப்ட்ட மோட்டோ எம் இரண்டு மாடல்களில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மோட்டோ எம் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஆஃப்லைன் வர்த்தகர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இவற்றின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 
 
\"\"
 
டூயல் சிம் ஸ்லாட் கொண்ட மோட்டோ எம் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ P15 பிராசஸர், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
 
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, 3050 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.