ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்

ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்

ஹோன்டா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான அமேஸ் மாடலில் 2-வது தலைமுறை மாடல் 2018-ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை அமேஸ் கார் விற்பனை 85,000 யூனிட்களை கடந்திருக்கிறது. இதிலிருந்தே இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதை உணர முடியும். 

 

ஹோன்டா நிறுவன வாகன விற்பனையில் 46 சதவிகித அளவுக்கு அமேஸ் காரின் பங்களிப்பு உள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்ட மாடல் அமேஸ் வி.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. பிரீமியம் மாடலாக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் இது வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.41,000 அதிகமாகும்.

 

 

இந்த ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு யு.எஸ்.பி. போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

 

அத்துடன் ஸ்டீரிங்கிலேயே குரல்வழி கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்விட்ச்களும் உள்ளன. டிரைவர் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி கதவுகளை இதன் மூலம் இயக்க முடியும். இத்துடன் ஏற்கனவே உள்ள வசதிகளான கீ-லெஸ் என்ட்ரி, தட்ப வெப்ப நிலையை தானாக கணிக்கும் தன்மை, பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. 

 

ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட அமேஸ் காருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் ஹோன்டா அமேஸ் வி.எக்ஸ். விலை ரூ.8.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.