ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட இக்னிஸ் ஆல்ஃபா அறிமுகம்

ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட இக்னிஸ் ஆல்ஃபா அறிமுகம்

ஆட்டோமேடிக் வாகனங்களை அனைவரும் வாங்கும் விலையில் வழங்கும் நோக்கில் மாருதி சுசுகி புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாருதி சுசுகி இக்னிஸ் ஆல்ஃபா மாடலை மேம்படுத்தியுள்ளது. புதிய இக்னிஸ் ஆல்ஃபா மாடலில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS-Auto Gear Shift) வசதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் மாடல் இதுவரை கணிசமான அளவு விற்பனையை சந்தித்துள்ளது. இக்னிஸ் ஆல்ஃபா AGS மாடலில் டூ-பெடல் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. புதிய டூ-பெடல் தொழில்நுட்பம் நகர்புறங்களில் வாகனத்தை இயக்குவதை எளிமையாக்குவதோடு, மற்ற மேனுவல் மாடல் வாகனங்களை விட கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
\"\"
 
இந்ததியாவில் விற்பனை செய்யப்பட்ட இக்னிஸ் மாடல்களில் 27 சதவிகிதம் இக்னிஸ் AGS மாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
புதிய இக்னிஸ் சுசுகியின் டோட்டல் எஃபெக்டிவ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமேடிக் மாடல்களை பராமரிப்பது மிகவும் எளிமையாகவும், அதிக சவுகரியத்தையும் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.   
 
இக்னிஸ் மாடலில் டூயல் ஏர்பேக்ஸ், ABS மற்றும் வழக்கமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் குழந்தைகள் அமர ISOFIX மவுண்ட்களும், 81.8 bhp செயல்திறனை 6,000 rpm மற்றும் 112 Nm டார்கியூவினை 4,200 rpm வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 74 bhp செயல்திறனை 4,000 rpm மற்றும் 190 Nm டார்கியூவினை 2000 rpm வழங்கும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.