ஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்

ஆண்டின் தலைசிறந்த கேட்ஜெட் விருது வென்ற சாம்சங் ஸ்மார்ட்போன்

இந்திய தலைநகரில் செப்டம்பர் 27-ம் தேதி துவங்கிய இந்திய மொபைல் காங்கிரஸ் விழா இன்றுடன் (செப்டம்பர்-29) நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

அந்தவகையில் ஆண்டின் தலைச்சிறந்த கேட்ஜெட் (Gadget of the Year) விருது சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான கேலக்ஸி நோட் 8 பிக்ஸ்பி டிஜிட்டல் அசிஸ்டணட், எஸ் பென் உள்ளிட்ட சாதனங்களுடன் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.67,900 முதல் துவங்கும். முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

\"\"

சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:


- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.