ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்

சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் GFXBench தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா XZ1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
கடந்த வாரம் வெளியான இந்த ஸ்மார்ட்போன் ஒரே சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் இம்முறை இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு சோனி எடிஷன் என அச்சிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிடும் என கூறப்படுகிறது. 
 
\"\"
 
இதனால் சோனியின் புதிய XZ1 ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் 5.1 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 19 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் சூப்பர்-ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் IFA, 2017 விழாவில் புதிய சோனி XZ1 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 31-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் மற்றொரு சாதனம் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெசல் லெஸ் டிஸ்ப்ளே, 6.0 இன்ச் ஃபுல் ஆக்டிவ் 2160x1080 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.