ஆண்ட்ராய்டு ஒ: டெவலப்பர் பிரீவியூ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஆண்ட்ராய்டு ஒ: டெவலப்பர் பிரீவியூ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு ஒ (Android O) என அழைக்கப்படும். இத்தகவலை கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு தலைவர் டேவ் புர்க் உறுதி செய்துள்ளார். இதனால் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பினை டவுன்லோடு செய்து செயலிகளை உருவாக்கலாம் என ஆண்ட்ராய்டு டெவலப்பர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
முதல் ஆண்ட்ராயடு ஒ டெவலப்பர் பிரீவியூ கட்டாயமாக தினசரி பயன்பாடுகளுக்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் பிளேயர், பிக்சல், பிக்சல் XL, பிக்சல் C சாதனங்களுக்கு வழ்கப்படுகிறது. இதே போல் அணியக் கூடிய சாதனங்களுக்கான எமுலேட்டர் ஆண்ட்ராய்டு 2.0 இயங்குதளத்தில் வழங்கப்படும் என டேவ் புர்க் தெரிவித்துள்ளார்.  
 
\"\"
 
இந்த ஆண்டிற்கான கூகுள் I/O மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் புதிய பதிப்பில் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்றும் பேட்டரி பேக்கப் நேரம் கூடுதலாக கிடைக்கும். இத்துடன் மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் பேட்டரி பேக்கப் குறையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.   
 
புதிய இயங்குதளத்தின் சேனல்ஸ் ஆப்ஷன் டெவலப்பர்களுக்கு நோட்டிபிகேஷன்களில் பல்வேறு மாற்றங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலின் பயன்பாடுகளை எளிதாக மாற்றியமைத்து கொள்ள முடியும். இதே போன்று பல்வேறு வசதிகள் புதிய பிரீவியூவில் வழங்கப்படவுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.