ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது WhatsApp

ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது WhatsApp

சாட்டிங்கை விட்டு வெளியேறினாலும் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ பின்னணியில் பிளே செய்வது தடை படாத வகையில் புதிய வசதி அறிமுகமாகிறது.

ஏற்கெனவே பிக்சர் இன் பிக்சர் எனும் பெயரில் ஒரு குழுவிலோ, தனி நபரோ அனுப்பிய வீடியோவை வாட்ஸ் ஆப்பிலேயே வைத்து பிளே செய்து பார்க்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

ஆனால், அந்த சாட்டிங்கை விட்டு வெளியேறிவிட்டால் வீடியோ பிளே ஆவதும் தடைபட்டுப் போகும். இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப்பின் ஆன்ட்ராய்டு சோதனை பதிப்பில் இந்த நடைமுறையை வாட்ஸ்ஆப் கொண்டு வருகிறது.

இந்தப் பதிப்பு ஐ.ஓ.எஸ்.சில் எப்போது வரும் என தற்போது அருதியிட்டுக் கூறமுடியாது என வாட்ஸ் ஆப் தரப்பில் கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.