ஆப்பிள் ஐபோன் 7 சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் வெளியீடு

ஆப்பிள் ஐபோன் 7 சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட ஐபோன் 7 மற்றம் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. சிவப்பு நிறம் கொண்ட புதிய ஐபோனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 
 
சிவப்பு நிறம் கொண்ட ஐபோன் 7 பிளஸ் விலை இந்திய மதிப்பில் ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 7 சிவப்பு நிறம் கொண்ட மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் நாடு முழுக்க அதிகாரப்பூர்வமான ஆப்பிள் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
\"\"
 
ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவை மார்ச் 24 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதே தேதியில் பல்வேறு இதர நாடுகளிலும் விற்பனைக்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ஐபோன்களில் 128 மற்றும் 256 ஜிபி மெமரி என இரு மாடல்கள் மட்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாத நிலையில் 64-பிட் A10 ஃபியூஷன் சிப், IP67 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேவும், ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 7 எம்பி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.