ஆரோக்கியமான உணவிற்கு மாறுங்கள்

ஆரோக்கியமான உணவிற்கு மாறுங்கள்

ஆரோக்கியம் என்பது நம் உடலில் மட்டுமல்ல. நம் தோற்றத்திலும் இருக்க வேண்டும். சுத்தமான தோற்றம், நகங்கள், சீவி முறையாய் வைத்த முடி, வாயில் துர்நாற்றம் இன்மை இவையெல்லாமும் மிக அவசியம். இதில் வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களின் சுகாதாரம் அவசியம். எளிதில் கிருமிகள் உருவாகி விடும். சில உணவுகள், புகை பிடித்தல் போன்றவைகளும் காரணமாகி விடும். தொண்டை சதை வீக்கம், ஈறு வீக்கம், கிருமி தாக்குதல் இவையும் வாயில் துர்நாற்றத்தினை ஏற்படுத்தி விடும். முதலில் காரணமறிந்து தேவைப்படின் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவது நல்ல பலன்களைத் தரும். 

தினமும் இருவேளை பல் துலக்குங்கள். காலை, இரவு இரு வேளையும் பல் துலக்குவது மிக அவசியம். காரமான பற்பசைகளைத் தவிருங்கள். ஒவ்வொரு முறை உணவு அருந்திய பின்னும் நன்கு வாய் கொப்பளியுங்கள். பற்களுக்கு இடையேஇருக்கும் உணவு துண்டுகளை Floss என்ற முறையில் நீக்குங்கள். 
கை விரலால் பல் தேய்த்த பிறகு ஈறுகளை மசாஜ் செய்யுங்கள். பல் செட் வைப்பவர்கள் அன்றாடம் அதனை சுத்தம் செய்யுங்கள்.

முடிந்த வரை ‘எண்ணெய் கொப்பளித்தல்’ oil pulling செய்யுங்கள் இதனை ஆயுர் வேத முறையில் மிகவும் அறிவுறுத்துகின்றனர். நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையினை காலையில் வாயில் ஊற்றி இருபது நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விடுங்கள். பற்கள் சுத்தம் ஆகின்றது. ஈறுகள் வலுப்பெறுகின்றன. வாய் துர்நாற்றம் நீங்குகின்றது. நாக்கினை நன்கு சுத்தம் செய்யுங்கள். 

வாய் துர்நாற்றம் வயிற்றில் சரியான ஜீரணம் இன்மை காரணமாக இருக்கலாம். probiotics உணவுகள் உணவுப் பாதைக்கு மிகவும் நல்லது. நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும். கொழுப்பு குறைந்த தயிர், மோர் இவை உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். காய்கறி சாலட், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். முளை கட்டிய பயறு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை இவை உங்களின் அன்றாட உணவில் இருக்கட்டும். 

அதிக மசாலா, ஸ்வீட் இவையெல்லாம் உங்களின் எதிரிகள். எளிமையான, ஆரோக்யமான உணவிற்கு உடனடியாக மாறுங்கள்.  

* உணவு உண்ணும் பொழுது அளவாகவே நீர் குடியுங்கள். சாப்பிட்டு 1/2 மணி நேரம் சென்று நீர் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் நீர் எடுத்துக் கொள்ளலாம். 

* அதிக ஸ்ட்ரெஸ் இருக்கும் பொழுது உணவு அருந்தாதீர்கள். 

* உங்களுக்கு பிகாம்ப்ளெக்ஸ் சத்து தேவைப்படுகின்றதா என்று மருத்துவரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 

* உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும். இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையை ஆரோக்கியமாய் வைக்கும். இதனால் உங்கள் வாயும் துர்நாற்றமின்றி ஆரோக்கியமாய் இருக்கும். 

* இலவங்கம், ஏலக்காய், சோம்பு இவை வாய் துர்நாற்றத்தினை நீக்க வல்லவை. 

வைட்டமின் டி: பல தடவை இதனைப் பற்றி எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு அதிகமாகவே காணப்படுகின்றது. 

உடல் மீது சூரிய ஒளிபடும் பொழுது கொலஸ்டிராலில் இருந்து இச்சத்து உருவாகின்றது. எனவே தான் வைட்டமின் ‘டி’ குறைபாடு இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் 10 - 20 நிமிடம் இளம் வெயிலில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகின்றது. வைட்டமின் ‘டி’யின் மற்றொரு பெயர் ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்பதாகும். சூரிய ஒளியில் உள்ள UUB கதிர் உடலின் மீது பட்டு சரும செல்களில் உள்ள கொலஸ்டிராலில் இருந்து வைட்டமின் ‘டி’ சத்து உருவாகச் செய்கின்றது. வைட்டமின் ‘டி’யின் உபயோகங்கள் மிக முக்கியமானதாக சமீப கால மருத்துவத்தில் வலியுறுத்தப்படுகின்றது. இந்த வைட்டமின்தான் குடலில் கால்ஷியம், பாஸ்பரஸ் உறிஞ்சச் செய்கின்றது. இந்த இரண்டு தாதுக்களும் ஆரோக்யமான உறுதியான எலும்பிற்கு மிக அவசியமானவை. 

வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு கீழ்கண்ட பாதிப்புகளுக்கு காரணம் ஆகின்றது என மருத்துவ உலகம் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றது. 

* எலும்பு தேய்மானம்
* எலும்பு கரைதல்
* புற்று நோய்
* மனஉளைச்சல்
* தசைகள் பலவீனம்
* இறப்பு
ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இவற்றின் மூலமும் வைட்டமின் டி கிடைக்கும். இவற்றினை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
சூரிய ஒளி மூலம் பெறுவது எளிதான வழி என்பது அனுபவ உண்மையாகும். ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளி மூலம், இதனைப் பெற முடியாது. எனவே சோம்பல் படாமல் காலை, மாலை நடைபயிற்சி மூலம் இதனைப் பெறுங்கள். 

நம் நாட்டில் பகல் வேலைகளில் மிகவும் கொளுத்தும் வெய்யிலாக இருப்பதால் இந்த நேரத்தினை சிபாரிசு செய்வதில்லை. காலை 10 மணி முதல் மாலை 3.00 - 4.30 மணி வரை (அக்னி நட்த்த்திர நேரத்தில் சூரிய உஷ்ணத்தினைப் பொறுத்து செய்யவும்) 10-20 நிமிடங்கள் உடல் மீது சூரிய ஒளி பட்டால் நல்லது. 

சற்று அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு அவர்களது நிறமே சிறந்த சரும பாதுகாப்பினை அளித்து விடுகின்றது. இது இயற்கை sun screen ஆகும். ஆனால் இவர்களுக்கு சற்று கூடுதல் நேரம் சூரிய ஒளி தேவைப்படும். எனவேத்தான் அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு சற்று கூடுதலாகவே உள்ளது. ஆனால் கறுப்பு கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து செல்வது இவையெல்லாம் தேவையே என்று கூறப்படுகின்றது. 

sun screen போட்டு வெய்யிலில் இருக்கலாமா என்ற கேள்வியினை இளைய சமுதாயம் நிறையவே கேட்கின்றது. இவர்கள் ‘ஏசி’யினை விட்டு வெளியே வருவதே கடினமாகி விட்டது. இவர்கள் காலையில் உடற்பயிற்சி என்ற முயற்சியில் திறந்த வெளியில் இருந்தாலே இவர்களது உடல் ஆரோக்கியம் காக்கப்படும். எந்த ஒரு நல்ல முயற்சியினையும் ஒன்று செய்யாது இருப்பது அல்லது அதிகமாக செய்து அதனை தீமையாக்கிக் கொள்வது மனித இயல்பாகி விட்டது. 

எந்த அளவிற்கு சூரிய ஒளி பெற வேண்டுமோ அந்த அளவே பெற வேண்டும். நம் ஊர் வெயிலுக்கு கூடுதலாக வெயிலில் இருந்தால் 

* sun brun எனப்படும் சரும பாதிப்பு ஏற்படும். சருமம் சிவந்து, வீங்கி, வலியுடன் கொப்பளங்கள் ஏற்படும். 
* கண் நோய்கள் உண்டாகும். 
* சருமம் வயோதிக தோற்றத்தினை அளிக்கும்.
* Heat Stroke எனப்படும் பாதிப்பு ஏற்படும்.
* சரும புற்று நோய் ஏற்படும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.