ஆஸ்துமா போக்கும்... விஷம் நீக்கும்... இயற்கையின் அற்புதம் மிளகு!

ஆஸ்துமா போக்கும்... விஷம் நீக்கும்... இயற்கையின் அற்புதம் மிளகு!

த்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்\' என்பது பழமொழி. அந்த அளவுக்கு திறன் படைத்தது மிளகு.
\'Piper nigrum\' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது கொடி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மிளகு, வால் மிளகு என இரண்டு வகை இருந்தாலும் பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகைகள் உள்ளன.

அஞ்சறைப்பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் இது... ரசம், புளிக்குழம்பு, சாம்பார் மற்றும் அசைவ உணவுகளில் சேர்க்கப்படுவதால் அது தரும் சுவையே தனி. வெறுமனே உணவில் சுவை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது மிளகு. குறிப்பாக, பனி மற்றும் மழைக்கால நோய்களை மிரட்டி விரட்டும் சக்தி படைத்தது.

சுக்கு மற்றும் திப்பிலியுடன் இதைச் சேர்த்து `திரிகடுகம்\' என்று அழைப்பார்கள். இது பல மருந்துகளுக்கு அனுபானமாக பயன்படுத்தப்படும். இதை ஒரு பாடல் போல \'சுக்குமி... ளகுதி... ப்பிலி\' என்று இடைவெளிவிட்டு சொல்வார்கள். நல்லதொரு பாடலைப்போல இருக்கும் இந்தத் திரிகடுகம் கார்ப்புச்சுவை நிறைந்தது. இது நுரையீரல் மற்றும் செரிமான மண்டலப் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியது.

திரிகடுகம் பொடியில் ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் உள்ளிட்ட கப நோய்கள் குணமாகும்.

மேலும், குறிப்பாக நெஞ்சுச்சளி, ஜலதோஷத்துக்கு இது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருந்தாக செயல்படும். பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் கலந்து 10 பூண்டுப்பற்களை தோலுரித்துச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கடைந்து குடித்து வந்தால் நெஞ்சுச்சளியும் ஜலதோஷமும் விலகி நிற்கும். இதை இரவு உறங்கப்போவதற்குமுன் அருந்தினால் சளியின் ஊதுகுழல்களான இருமல், மூக்கடைப்பு விலகி நிம்மதியான தூக்கம் வரும். மறுநாள் காலை அதன் முழுப்பலனை உணர முடியும்.

மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

மிளகுத்தூளுடன் கிராம்புத் தைலம் சேர்த்து பற்களின்மீது தடவி வந்தால் பல்வலி குணமாகும். இதேபோல் மிளகுத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுவதோடு பல் வலி வராமல் பாதுகாக்கும்.

மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசி வந்தால் அந்த இடத்தில் முடி வளரும்.

சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகைச் சேர்த்து அரைத்து முகப்பருக்களின்மீது பற்று போட்டு வந்தால் விரைவில் உதிர்ந்துவிடும்.

திரிகடுகத்துடன் கல் உப்பு, பெருஞ்சீரகம் சேர்த்துப் பொடியாக்கி இரண்டு முதல் நான்கு கிராம் வரை உணவுக்குப்பின் மென்று தின்று வந்தால் செரிமானக்கோளாறு நீங்கி வயிற்று நோய்களைப் போக்கும்.

\"மிளகுப்பொடி\"

10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும்.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் ஐந்து மிளகைச் சேர்த்து மென்று தின்று வந்தால் பிரச்னை தீரும்.

விஷக்கடிகளுக்கும் மிளகு நல்லதொரு மருந்தாக அமையும். 100 மி.லி வெற்றிலைச் சாற்றில் 35 கிராம் மிளகைச் சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் பூரான் விஷம் இறங்கும். அப்போது உணவில் புளி, நல்லெண்ணெய்சேர்க்கக்கூடாது. தேள் கடித்தால் 20 மிளகை சம அளவு தேங்காய் சேர்த்து மென்று தின்று வந்தால் விஷம் படிப்படியாக இறங்கும்.

மிளகுடன் கசகசா, ஓமம், துத்தி தலா 100 கிராம் எடுத்து பொடியாக்கி காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மூலம், அடிதள்ளுதல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.