இணை­ய­தள புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் இந்­தி­யா­வில் 27 கோடி­யாக உயர்வு

இணை­ய­தள புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் இந்­தி­யா­வில் 27 கோடி­யாக உயர்வு

இந்தியாவில், மூன்று ஆண்டுகளில், புதிய இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 26.89 கோடியாக அதிகரித்துள்ளதாக, அடோப் டிஜிட்டல் இன்சைட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில், கடந்த மூன்று ஆண்டுகளில், இணையதளத்தை உபயோகிக்கும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 50 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், பாதிக்கும் மேல், அதாவது, 26.89 கோடி பேர், இந்தியாவில் உள்ளனர்.

இது குறித்து, அந்த ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச அளவில், ஆசிய பசிபிக் நாடுகளில் தான், புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கடந்த, 2014லிருந்து, இந்தியாவில், 26.89 கோடி பேர், புதிதாக இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கு, ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது முக்கியமான காரணமாக இருக்கிறது.இந்தியாவை தொடர்ந்து, சீனாவில், 9.74 கோடி பேர்; இந்தோனேஷியாவில், 1.57 கோடி பேர் புதிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

சர்வதேச அளவில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2018ல், சர்வதேச ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியாவின் பங்கு மட்டும், 46 சதவீதம் என்றளவில் இருக்கும். இதனால், இணையதள பயன்பாடும், இந்தியாவில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.