இணையதளங்களை அடிக்கடி முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

இணையதளங்களை அடிக்கடி முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்

உலகளவில் பல்வேறு காரணங்களுக்காக இணையதள சேவையை அடிக்கடி முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. இணையதளங்களால் பல நாடுகளில் புரட்சி ஏற்பட்டுள்ளது. சமீபத்திய உதாரணமாக அரபு நாடுகளில் கொண்டுவரப்பட்ட நவீன நடைமுறைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

முக்கியமாக இந்தியாவில் நடக்கும் பல போராட்டங்கள் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டில் பல இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இணைய சேவையை முடக்கும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் காரணங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற பல தேவைகளையொட்டி இணைய சேவை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2018 வரை 154 முறை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் சமீப காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் ஏற்று நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழல் காரணமாக எப்போதும் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் பதற்றமான பகுதிகளில் இனைய சேவை முடக்கப்படுகிறது.


நாட்டில் அதிகமாக காஷ்மீரில் 60 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இணையதள் சேவை முடக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடத்தில் 16,000 மணி நேரம் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு ரூ.21,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மற்ற நாடுகளுடன் இந்த தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியாவை விட மற்ற நாடுகளில் இணைய சேவை குறைவான அளவிலேயே முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 

பாகிஸ்தானில் 19 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கேயும் காஷ்மீர் பிரச்சனை காரணமாகவே இணையம் முடக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.