இணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்

இணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்

பென்ட்லி பென்ட்யகா, ரோல்ஸ் ராய்ஸ் கலினன் வரிசையில் அடுத்த ஆடம்பர எஸ்யுவி மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபக் ஜி.எல்.சி. உருவாகியுள்ளது.
 
2018 பெய்ஜிங் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய மேபக் ஜி.எல்.எஸ். புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புகைப்படங்களில் புதிய எஸ்யுவி தோற்றம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கிறது. விஷன் மெர்சிடிஸ் மேபக் அல்டிமேட் லக்சரி என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. 
 
இந்த கான்செப்ட் எஸ்யுவி முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 730 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெரிய 80 kWh பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும்.
 
 
வடிவமைப்பை பொருத்த வரை முகப்பில் பார்க்க மேபக் எஸ்-கிளாஸ் போன்று காட்சியளிக்கிறது. முன்பக்கம் பிரம்மாண்ட க்ரோம்-அவுட் செய்யப்பட்ட கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. இதன் பம்ப்பர் காரின் தோற்றத்தை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது.
 
வெளிப்புறத்தை போன்றே உள்புறத்திலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு காரின் அனுபவத்தை மேலும் வசீகரிக்கும் படி இருக்கிறது. இதன் டேஷ்போர்டு அதிக கிளட்டர் இன்றி கிளாசிக் டச் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் மேபக் கான்செப்ட் எஸ்யுவி மட்டுமின்றி புதிய ஏ-கிளாஸ் செடான்  மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.