இணையத்தில் லீக் ஆன வால்வோ வி60 புகைப்படம்

இணையத்தில் லீக் ஆன வால்வோ வி60 புகைப்படம்

வால்வோ மோட்டார்ஸ்-இன் புதிய கார் பிப்ரவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ வெளியிட இருக்கும் புதிய காருக்கான டீசர் வீடியோவினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 
 
புதிய வால்வோ வெளியீடு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நியூ-ஜென் வால்வோ வி60 புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புகைப்படங்களின் தரம் குறைவாக இருப்பதால் காரின் கூர்மையான விவரங்கள் தெரியவில்லை. தற்சமயம் கசிந்திருக்கும் புகைப்படங்கள் விளம்பர வீடியோவில் இருந்து கசிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
புதிய காரின் புகைப்படங்கள் பார்க்க வி90 மாடலின் பெரிய வடிவமாக காட்சியளிக்கிறது. இதனால் சில அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ஒரே மாதிரியாக வால்வோ வி90 போன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது வி90 மாடலை விட வால்வோ வி60 சில இடங்களில் பெரியதாக காட்சியளிக்கிறது. 
 
எனினும் வெளிப்புறங்களில் செங்குத்தான எல்இடி டெயில் லேம்ப், டெயில்கேட், காரின் ப்ரோஃபைல் பார்க்க வால்வோ வி90 போன்று இருக்கிறது. புதிய மாடலின் சற்றே வித்தியாசமான பின்புற பம்ப்பர், எக்சாஸ்ட் செட்டப் உள்ளிட்டவை வால்வோ XC660-ஐ நினைவூட்டுகிறது. 
 
புகைப்படம் நன்றி: AutoMotoSvijet/Motor1
 
மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய அலாய் வீல், தார் ஹேம்மப் எல்இடி டே-டைம் ரன்னிங் லேம்ப், மல்டி-ஸ்லாட் கிரிள், நீண்ட பொனெட் மற்றும் வால்வோ எஸ்டேட் மாடல்களின் வழக்கமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்வோ வி90 எஸ்டேட் போன்றே வால்வோ வி60 வேகன் அந்நிறுவனத்தின் SPA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
புதிய வால்வோ மாடலின் இன்ஜின் அம்சங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் வால்வோ வி60 மாடலில் 2.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 233 பி.ஹெச்.பி. பவர், 480 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
 
இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாரில் டியூன் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இது 400 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 640 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.