இணையத்தில் லீக் ஆன 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 9: முழு தகவல்கள்

இணையத்தில் லீக் ஆன 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 9: முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் ரகசியமாக உருவாக்கி வரும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 இருக்கிறது. இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. தற்சயம் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 உயர்-ரக ஸ்மார்ட்போன் முன்னதாக கூறப்பட்டு வந்த நோக்கியா P1 ஸ்மார்ட்போன் தான் என்றும் கூறப்படுகிறது. 
 
புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் நோக்கியா OZO ஆடியோ வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம், 5.5 இன்ச் QHD 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும். 
 
இத்துடன் 22 எம்பி பிரைமரி டூயல்-லென்ஸ் கேமரா அமைப்பு, Carl Zeiss ஆப்டிக்ஸ் மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 64ஜிபி மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.  மேலும் 3800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், குவிக் சார்ஜ் 4.0 வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
\"\"
 
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் அதிநவீன OZO ஆடியோ வழங்கப்படலாம். மேலும் 3D ஆடியோ வசதி வழங்கப்படுமா என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை என்றாலும் IP68 சான்று (வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்) மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்படலாம்.   
 
முன்னதாக சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டது. இதில் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் அமைப்பை இயக்கும் திறன் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.