இதயத்தை வலுவாகும் பேரிக்காய்

இதயத்தை வலுவாகும் பேரிக்காய்

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.
 
எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
 
திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும். மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.
 
கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும்.
 
 
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் தோலில் அதிக அளவு உள்ள தாவர ஊட்டச்சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகின்றன என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
 
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.
 
இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
 

 

பேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்பு படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.