இதயநோய், கொலஸ்ட்ராஸ் பிரச்சனையில் இருந்து காக்கும் பாதாம்

இதயநோய், கொலஸ்ட்ராஸ் பிரச்சனையில் இருந்து காக்கும் பாதாம்

நட்ஸ் உணவுகளில் பாதாம் மிகவும் சிறந்த உணவு. இது உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாவதுடன், அவர்கள் சீக்கிரம் நடைபழக ஆரம்பித்துவிடுவார்கள்.

பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.

பாதாமில் தாவர புரதம், கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நமது உடற்சக்தியை அன்றாடம் சீர்கெடாமல் பார்த்துக்கொள்பவை ஆகும்.
 
* தினமும் 15 - 25 கிராம் பாதாம் சாப்பிட வேண்டும். இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிரால் அதிகரிக்க இது உதவும். 
 
* பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் இருக்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க உதவும். 

\"\"
 
* டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் பாதாம் மட்டும் விதிவிலக்கு. 
 
* பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இதய நோயைக் கட்டுப்படுத்தும்.
 
* இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், மாரடைப்பு வரும் அபாயம் 50 % குறையும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 
 
* பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற வைட்டமிம், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலம் புத்திக்கூர்மைக்கு உதவுபவை. 
 
* பாதாமில் உள்ள நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
 
* பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் பாதாம் விடை கொடுக்கும். 
 
* சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளும் போது இதில் உள்ள உயர் கார்போஹைட்ரேட் தொப்பை கொழுப்பை குறைக்கும்.
 
* பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.