இதய நோய் வராமல் தடுக்கும் பதமான டிப்ஸ்

இதய நோய் வராமல் தடுக்கும் பதமான டிப்ஸ்

அதிக தூரம் நடக்கும்போதோ, படியேறும்போதோ, உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும்போதோ, மனஅழுத்தத்தின்போதோ, நெஞ்சு வலி ஏற்படும். ஓய்வு எடுத்தால், வலி குறைந்து நின்றுவிடும். சிலருக்கு வேலை செய்யாமல் ஓய்வாக இருக்கும்போதேகூட நெஞ்சு வலி ஏற்படலாம். இந்தக் குறிப்பிட்ட நிலை ஆபத்தானது. 

ஏற்கெனவே ஒரு முறை நெஞ்சு வலி வந்திருந்து, இப்போது குறைந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யும்போதுகூட நெஞ்சு வலி வந்ததென்றால், நிச்சயம் உடலைக் கவனிக்க வேண்டும். ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழமுடியும்.

புகை, மது பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

உடலுக்கு தேவையான அளவு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்..

\"\"

பெற்றோருக்கு இதய நோய் இருந்தால், அடுத்தத் தலைமுறைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் சிறுவயதில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அதிகப்படியான மன அழுத்தம், பல நோய்களுக்குக் காரணம். முடிந்த வரை அழகான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதிகம் ஆபத்தைத் தரும் கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

கொடம்புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதை அன்றாட உணவில் பயன்படுத்தலாம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அரிசி உணவை முற்றிலும் தவிர்க்காமல், மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

தேவையில்லாமல் உணவை வயிற்றினுள் திணிக்கக்கூடாது. உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கிய உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.