இது கார் தான் - ஆனால் ரோபோட் போன்று நடக்கவும், சுவர் ஏறவும் செய்யும்

இது கார் தான் - ஆனால் ரோபோட் போன்று நடக்கவும், சுவர் ஏறவும் செய்யும்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கான்செப்ட் கார் நடக்கவும், சுவர் ஏறும் திறன் கொண்டிருக்கிறது. கான்செப்ட் ஹூன்டாய் எலிவேட் ரோபோடிக் கால்களை கொண்ட முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த காரில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ரோபோட்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டிருப்பதால், இந்த கார் நடக்கவும், சுவர் ஏறும் திறன் பெற்றிருக்கிறது. இந்த கார் அதிகபட்சம் ஐந்து அடி உயரமுள்ள பகுதிகளை ஏறி கடக்கும். கார் உயரமான பகுதிகளில் ஏறும் போதும் காரில் அமர்ந்து இருப்பவர்களுக்கு எவ்வித அசைவும் உணரச் செய்யாது. 

 

 

தற்சமயம் ஹூன்டாய் எல்வேட் கார் சாலை போக்குவரத்துகளை கடக்க பயனுள்ளதாக இருக்கிறது. “தற்போதைய மீட்பு வாகனங்களால் சுனாமி அல்லது நிலநடுக்கும் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது ஓரளவு பகுதிகளை கடக்க முடியும். மற்ற பகுதிகளை நடந்தே தான் கடக்க வேண்டும். எல்வேட் எவ்வித கடினமான பகுதிகளையும் கடக்கும்” என ஹூன்டாய் நிறுவன ரோபோடிக் ஆய்வு பிரிவு துணை தலைவர் ஜான் சு தெரிவித்தார். 

 

அதிநவீன இ.வி. பிளாட்ஃபார்ம் சார்ந்த அல்டிமேட் மொபிலிட்டி வாகனமாக ஹூன்டாய் தனது எலிவேட் கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்த வாகனம் பயன்பாட்டு சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களை மாற்றிக் கொள்ளலாம்.

 

 

நான்கு இயந்திர கால்கள் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சி.இ.எஸ். 2019 விழாவில் ஹூன்டாய் சிறிய ரக மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது நான்கு சக்கரங்களுடன் வழக்கமான கார் போன்று செல்லவும், நீட்டிக்கப்பட்ட கால்களுடன் நடக்கவும் செய்யும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.