இந்தியன் மோட்டார்சைக்கிள்: மூன்று மாடல்களின் விலை ரூ.2.21 லட்சம் வரை குறைந்தது

இந்தியன் மோட்டார்சைக்கிள்: மூன்று மாடல்களின் விலை ரூ.2.21 லட்சம் வரை குறைந்தது

அமெரிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் பிரான்டின் மூன்று மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்துள்ளது. இந்தியாவில் ஜூலை 1-ந்தேதி முதல் அமலாகியுள்ள ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் மூன்று மாடல்களின் விலை குறைந்துள்ளது. 
 
இந்தியன் மோட்டார்சைக்கிள் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் போலாரிஸ் இந்தியா- மூன்று வாகனங்களின் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஸ்கௌட், இந்தியன் டார்க் ஹவுஸ் மற்றும் இந்தியன் சீஃப் கிளாசிக் மாடல்களின் விலையில் இருந்து 9 முதல் 12 சதவிகிதம் வரை விலை குறைந்துள்ளது. 
 
ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பிந்தைய விலை பட்டியலில் இந்தியன் ஸ்கௌட் விலை ரூ.12.99 லட்சம் ஆகும். முன்னதாக இதன் விலை ரூ.14.75 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் டார்க் ஹார்ஸ் மாடலின் விலை ரூ.23.4 லட்சத்தில் இருந்து 9 சதவிகிதம் குறைக்கப்பட்டு ரூ.21.25 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.   
 
\"\"
 
இந்தியன் சீஃப் கிளாசிக் மாடலின் விலையில் 9 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் ரூ.24.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சீஃப் கிளாசிக் இனி ரூ.21.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என போலாரிஸ் தெரிவித்துள்ளது. இந்தியன் மோட்டார்சைக்கிள் மொத்தம் ஒன்பது மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
 
மற்ற இருசக்கர வாகன நிறுவனங்களான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, ஹோன்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீல்டு, எமஹா மற்றும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவன வாகனங்களின் விலை ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரிமுறையைத் தொடர்ந்து குறைந்தது.
 
இதேபோன்று கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான், ஸ்கோடா, இசுசு மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், மஹேந்திரா & மஹேந்திரா, ஹோன்டா கார்ஸ் இந்தியா, ஃபோர்டு, மாருதி சுசுகி, டொயோட்டா ஜாகுவார் லேண்ட் ரோவர், பி.எம்.டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி உள்ளிட்ட மாடல்களின் குறைந்தன.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.