இந்தியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் பிரான்டு: சியோமி முதலிடம்

இந்தியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் பிரான்டு: சியோமி முதலிடம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் விரும்பும் பிரான்டாக சியோமி இருக்கிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான சியோமி இந்த ஆண்டு சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
ஒட்டுமொத்த சந்தையில் 26 சதவிகித பங்குகளுடன் அதிம் விரும்பப்பட்ட ஸ்மார்ட்போன் பிரான்டாக சியோமி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சியோமியை தொடர்ந்து சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முறையே 12 சதவிகித பங்குகளை பெற்றுள்ளன. 
 
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்த பட்டியலில் 2 சதவிகித பங்குகளுடன் கடைசி இடம் பிடித்துள்ளது. லெனோவோ மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்கள் முறையே 6 மற்றும் 7 சதவிகித பங்குகளை பெற்றுள்ளன. ஒன்பிளஸ் 6 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. 
 
\"\"
 
ஸ்மார்ட்போன் வாங்குவோர் நெட்வொர்க், பிராசஸர் வேகம், கேமரா, திரை அளவு, மற்றும் ரெசல்யூஷன் உள்ளிட்டவற்றை முக்கியமாக கருதி தங்களது ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர் என இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 

இந்திய சந்தையில் களமிறங்கியது முதல், இந்திய சந்தையில்  சியோமி நிறுவனம் முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சியோமியின் வளர்ச்சி விகிதம் ஆண்டு அடிப்படையில் 125%, காலாண்டு வரையில் 17% ஆக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.