இந்தியாவில் ஐபோன் SE ரூ.19,999/- மட்டுமே

இந்தியாவில் ஐபோன் SE ரூ.19,999/- மட்டுமே

இந்தியாவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் ஐபோன் SE 16 ஜிபி மாடலினை ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதே போல் 64 ஜிபி ஐபோன் SE ரூ.25,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. புதிய விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி வாங்கும் போது சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது. 
 
சிறப்பு தள்ளுபடி குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆப்பிள் இந்திய தளத்தில் ஐபோன் SE 16 ஜிபி மாடல் ரூ.39,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.44,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் ஆப்பிள் விநியோகஸ்தர்கள் குறைந்த விலையில் விற்பனையை துவங்கியுள்ளனர். 
 
\"\"
 
அதன் படி பல்வேறு விநியோகஸ்தர்களும் ஐபோன் SE 16 ஜிபி மாடலினை ரூ.27,000 - ரூ.29,000 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்சமயம் ரூ.24,999 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இத்துடன் ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.
 
ஐபோன் SE மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கேஷ்பேக் சலுகையானது மார்ச் 31, ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகைக்கான பணம் முன்பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
\"\"
 
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Se மாடல் மார்ச் 2016 ஆம் ஆண்டு 4.0 இன்ச் திரை கொண்ட ஐபோனினை வெளியிட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் Se மாடலில் 4.0 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ9 பிராசஸர் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க பிரைமரி கேமரா மூலம் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டச் ஐடி கைரேகை ஸ்கேனர் மற்றும் ஐஓஎஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.