இந்தியாவில் செல்ஃபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 வரை தள்ளுபடி

இந்தியாவில் செல்ஃபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 வரை தள்ளுபடி

ஒப்போ நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் வெளியிட்ட F3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.3,000 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மார்ச் மாதம் வெளியிடப்பட்ட F3 பிளஸ் ஸ்மாப்ட்போனின் விலை ரூ.30,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் பிளாக் எடிஷனும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
ஒப்போ F3 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா 120 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ், மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX398 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
 
 
\"\"
 
 
ஒப்போ F3 பிளஸ் சிறப்பம்சங்கள்:
 
 
* 6.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080 பிக்சல் ரெசல்யூஷன்
* ஆக்டாகோர் ஸ்னாபிடிராகன் 653 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 6.0.1 சார்ந்த கலர் ஒ.எஸ். 3.0
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* 4000 எம்ஏஎச் பேட்டரி
 

 

ஒப்போ F3 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.27,990 எனும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.