இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் விலை ரூ.14,395 லட்சத்தில் துவங்கி அதிகபட்ச டாப் என்ட் மாடல் ரூ.20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் புதிய மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள காம்பஸ் எஸ்.யு.வி. மொத்தம் மூன்று மாடல்கள், - ஸ்போர்ட், லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் வெளியாகி்யுள்ளது.
 
புத்தம் புதிய ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்.யு.வி. வகை ஸ்டைலிங் கொண்டுள்ள ஜீப் காம்பஸ் பாரம்பரிய ஜீப் வடிவமைப்பு மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மாடலாக அமைந்துள்ளது. புதிய ஜீப் கிரில், வீல் ஆர்ச் மற்றும் எல்இடி புதிய மாடலில் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.   
 
இந்த எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி DRL மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களை மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல் வடிவமைப்பு கவர்ச்சியாக இருப்பதோடு பெயின்ட் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வித நிறங்களில் தங்களுக்கு பிடித்தமான நிறத்தை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மினிமல் கிரே, எக்சாட்டிக்கா ரெட், ஹைட்ரோ புளூ, வோகல் வைட் மற்றும் ஹிப் ஹாப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
\"\"
 
இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை கேபின் ஸ்மார்ட் வைட் லெதர் சீட் கதவுகள் வரை நீள்கிறது. ஒட்டுமொத்த டேஷ்போர்டு மிக எளிமையாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெனஅட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்படுகிறது. 
 
இத்துடன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை, எலெக்ட்ரானிக் பார்க்கிங் அசிஸ்ட், ஃப்ரீக்வன்சி சென்சிங் டேம்பிங் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஜீப் இந்தியா தகவல்களின் படி காம்பஸ் எஸ்.யு.வி. 50 பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.   
 
ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது. டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. 
 
\"\"
 
இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது. ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  
 
ஜீப் இந்தியா இதுவதை வழங்கியுள்ள தகவல்களில் புதிய எஸ்.யு.வி. இதுவரை 38,000 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் 5,000 பேர் இந்த மாடலை வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க 50-க்கும் அதிகமான விநியோக மையங்களை துவங்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர நாடு முழுக்க 48 சர்வீஸ் மையங்கள் இயங்கி வருகிறது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.