இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் கே.டி.எம். RC250: ஸ்பை படங்கள்

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் கே.டி.எம். RC250: ஸ்பை படங்கள்

ஆஸ்த்ரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான கே.டி.எம். 2017 டியூக் மற்றும் RC சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் வெளியிட்ட நிலையில், புதிய மோட்டார்சைக்கிளினை கே.டி.எம். வெளியிட இருக்கிறது.

கே.டி.எம். RC250 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் RC390 போன்றே காட்சியளிக்கிறது. எனினும் பக்கவாட்டுகளில் உள்ள ஸ்டிக்கர்களில் RC250 ஸ்டிக்கர் செய்யப்பட்டுள்ளது. 

தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது கே.டி.எம். RC250 மாடலில் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வடிவமைப்புகளை பொருத்த வரை RC250 பார்க்க RC390 போன்றே காட்சியளிக்கிறது.

\"\"

புதிய RC250 மாடலில் 248.8சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 30bhp மற்றும் 24Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கே.டி.எம். RC250 மாடலில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வழங்கப்படாத நிலையில், ரைடு-பை-வையர்-திராட்டிள் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட அம்சங்கள் புதிய 2017 RC390 மாடலில் வழங்கப்பட்டது. அந்தவகையில் புதிய RC250 மாடலில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் டியூக் 250 மாடலின் விலை ரூ.1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிய RC250 விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய RC250 இந்சியாவில் கவாசகி நின்ஜா 300, பென்லி 302R மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.