இந்தியாவில் தாணியங்கி கார்களை அனுமதிக்க முடியாது: மத்திய மந்திரி திட்டவட்டம்

இந்தியாவில் தாணியங்கி கார்களை அனுமதிக்க முடியாது: மத்திய மந்திரி திட்டவட்டம்

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வேலை பறிபோகும் என்பதால் தாணியங்கி கார்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நிதி மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் பலருக்கு ஓட்டுநர் பயிற்ச்சி அளிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவி்ல் தாணியங்கி கார்களை அனுமதிக்க மாட்டோம். இந்தியாவில் தற்சமயம் 22 லட்சம் ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு வாடகைக்கு கார் வழங்கும் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. மக்களுக்கு வேலையின்மையை ஏற்படுத்தும் எவ்வித திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என கட்கரி தெரிவித்தார். 
 
இத்துடன் இந்தியர்கள் மின்சார நான்கு சக்கர டாக்சி அல்லது இரு சக்கர வாகனங்களை தேர்வு செய்யும் வசதி கொண்ட கேப் சேவையை துவங்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தைக் கொண்டு நாட்டில் இயங்கி வரும் கேப் சேவைகளுக்கு போட்டியளித்து பொது போக்குவரத்துக்கு ஏற்படும் செலவை வெகுவாக குறைக்கும் படி இருக்கும்.  
 
இந்தியாவில் மின்சாதன வாகனங்களை ஊக்குவிப்போம், ஆனால் அவற்றின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாற்றாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வாகனங்களை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் மற்றும் சாட்டிலைட் டிராக்கிங் அவசியம் பொருத்த வேண்டும் என்ற திட்டமும் துவங்கப்பட இருக்கிறது. 
 
உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கிகளுடன் போக்குவரத்து வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம அனைத்து பொதுத் துறை பேருந்துகளும் ஆடம்பர பேருந்துகளாக மாற்றப்பட்டு அனைவரும் இந்த பேருந்துகளில் பயணிக்க வழி செய்யப்படுகிறது. ஆடம்பர பேருந்துகளின் விலை சாதாரண பேருந்துகளை விட 40 சதவிகிதம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.