இந்தியாவில் மெர்சிடிஸ் இ கிளாஸ் வெளியானது

இந்தியாவில் மெர்சிடிஸ் இ கிளாஸ் வெளியானது

புதுடெல்லி:
 
2018 மெர்சிடிஸ் AMG E63 S இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் சக்திவாய்ந்த AMG மாடலாக புதிய மெர்சிடிஸ் AMG E63 S இருக்கிறது. புதிய பெர்ஃபார்மன்ஸ் மாடல் புத் சர்வதேச சர்கியூட்டில் வெளியிடப்பட்டது. இதே இடத்தில் பத்திரிக்கையாளர்கள் டிராக் ட்ரிப் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  
 
இந்தியாவின் சக்திவாய்ந்த இ கிளாஸ் என்ற தலைப்பில் மெர்சிடிஸ் AMG E63 S மாடலில் 4.0 லிட்டர் பைடர்போ வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6112 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்கியூ மற்றும் 9 ஸ்பீடு AMG ஸ்பீடுஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
 
புதிய பென்ஸ் இன்ஜின் நான்கு சக்கரங்களுக்கும் திறனை வழங்குகிறது. மெர்சிடிஸ் பெனஅஸ் 4மேடிக் பிளஸ் AWD சிஸ்டம் கொண்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் பின்புற சக்கரம் மட்டும் இயங்கும் படி ரியர்-வீல்-டிரைவ் மட்டும் தேர்வு செய்ய முடியும்.
 
 
டர்போ லேக் குறைக்க, AMG மாடலின் இரண்டு சிலிண்டர் ஹெட்களுக்கும் மத்தியில் பைடர்போ யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளது. பைடர்போ இன்ஜின் சரிசமமாக உருவாக்கப்பட்ட டர்போசார்ஜர்களை பயன்படுத்தும். அந்த வகையில் பைடர்போ அதிக டர்போ லேக் வழங்கும், ட்வின் டர்போ செட்டப் குறைந்த பூஸ்ட் மற்றும் குறைந்த டர்போ லேக் வழங்கும்.
 
மெர்சிடிஸ் பென்ஸ் AMG E63 S மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் செல்லும். புதிய AMG மாடலின் உச்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் என எலெக்ட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டுள்ளது. எனினும் AMG டிரைவர்ஸ் பேக்கேஜ் தேர்வு செய்து மணிக்கு 300 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியும்.
 
ஃபியூயல் திறனை மேம்படுத்த AMG E63 S மாடலில் சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் செய்ய முடியும். இந்த சிஸ்டம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது குறைந்த லோடு நிலைகளில் 2,3,4 மற்றும் 8 சிலிண்டர்களுக்கான மின்திறனை நிறுத்தி விடும். மெர்சிடிஸ் AMG E63 S மாடலின் உள்புறத்தில் ஆடம்பரம் மற்றும் சௌகரிய அனுபவத்தை வழங்குகிறது. 
 
இந்த காரில் 12.5 இன்ச் டூயல் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்று வேலை செய்கிறது.
 
 
 
மெர்சிடிஸ் AMG E63 S அம்சங்கள்:
 
 
- AMG பெர்ஃபார்மன்ஸ் சீட்கள்
- சீட் ஹீட் மற்றும் கூலிங்
- 3-சோன் கிளைமேட் கன்ட்ரோல்
- பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம்
- கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் ரேஸ் போன்ற டிரைவிங் மோட்கள்
- ஒன்பது ஏர்பேக்-கள்
- பல்வேறு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம்கள்
- கார்பன்-ஃபைபர் அம்சங்கள்
 

 

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் AMG E63 S விலை ரூ.1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் AMG E63 S இந்தியாவில் பிஎம்டபுள்யூ M5, மசேரெட்டி குவாட்ரோபோர்ட் ஜிடிஎஸ், போர்ஷ் பனமெரா டர்போ மற்றும் ஆடி ஆர்எஸ் 6 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.