இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R: விரைவில் வெளியாகும் என தகவல்

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R: விரைவில் வெளியாகும் என தகவல்

மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிக செயல்திறன் கொண்ட மாடலான AMG சர்வதேச சந்தையில் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக அந்நிறுவனம் GLC 43 AMG கூப், GLS 63 AMG, மற்றும் ஸ்பெஷல் எடிஷன் G63 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
அந்தவகையில் அந்நிறுவன வெளியீட்டு பட்டியலில் AMG GT-R இணைந்துள்ளது. டிராக் ஃபோகஸ்டு மாடலான AMG GT-R அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 
 
இந்த மாடல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, விசேஷமான பச்சை நிறம் கொண்டுள்ளது. கிரீன் ஹெல் மாங்கோ (Green Hell Magno) என அழைக்கப்படும் புதிய மாடலின் முக்கிய மேம்படுத்தல்களில் காரை வேகமாக இயக்க வசதியாக புதிய ஏரோடைனமிக் பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 
இதில் புதிய பம்ப்பர், கிரில், முன்பக்கம் மற்றும் பின்பக்க விங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர் வீல் ஸ்டியரிங் கொண்ட முதல் AMG மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மணிக்கு 100-க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் போது வாகனம் அதிக கட்டுப்பாட்டில் இருக்க ஏதுவாக பின்பக்க சக்கரங்கள் எதிர்திசையிலும், முன்பக்க சக்கரங்கள் துரிதமாக செல்லும். 
 
புதிய AMG GT-R 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 577 Bhp மற்றும் 700 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இது தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் AMG GT-S மாடலை விட கிட்டதட்ட 74 Bhp மற்றும் 50 Nm செயல்திறன் அதிகம் ஆகும். இந்த மாடல் 3.6 நொடிகளில் 0-100 வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 318 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிகாரப்பூர்வமாக இந்தியா வந்துள்ள புதிய மெர்சிடிஸ் AMG GT-R விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில் வெளியீட்டிற்கு பின் இதன் விநியோகம் துவங்கும். இதன் விலை இந்தியாவில் ரூ.3 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.