இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

இந்தியாவில் பிரபலமான ஆடம்பர கார் தாயரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஒருவழியாக GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரினை வெளியிட்டுள்ளது. முன்னதாக 2017 - டெட்ராய்ட் மோட்டார் விழாவில் GLA ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆண்டில் மட்டும் மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ள ஏழாவது மாடல் கார் இது. ஏற்கனவே புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLS 63 மற்றும் எஸ்-கிளாஸ் கான்சீர்ஜ் எடிஷன் போன்ற மாடல்கள் வெளியிடப்பட்டது. 
 
நடுத்தர அப்டேட் மாடலான GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிரபல அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதோடு மற்ற போட்டி நிறுவனங்களான பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மற்றும் ஆடி கியூ3 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இரண்டு மாடல்களும் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
\"\"
 
புதிய GLA ஃபேஸ்லிஃப்ட் டூ ட்ரிம்ஸ் ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் ட்வீக்கென்ட் பம்ப்பர்கள் மற்றும் புதிய க்ரில் காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாகவும், அழகாகவும் வெளிப்படுத்துகிறது. முன்பக்க பம்ப்பர் கூர்மையாகவும், அதிகப்படியான காற்றை உள்பக்கம் எடுத்துக் கொள்ளும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
2017 மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் 2.1-லிட்டர் டீசல் இன்ஜின் இருவித ஆப்ஷன்கள்- 134 bhp 200d மற்றும் 168 bhp 220d கொண்டுள்ளது. இத்துடன் GLA 200 மாடல்களில் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களை 180bhp வழங்குகிறது. இதில் 7-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் AWD வழக்கமான அம்சமாக இருக்கிறது. 
 
\"\"
 
ஓட்டுநரின் பாதுகாப்பை அதிகப்படுத்த GLA ஃபேஸ்லிஃப்ட் ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இந்த வசதி கார் GLA அருகில் செல்லும் போது ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யும். இது ஏற்கனவே வழங்கப்படும் அட்டென்ஷன் அசிஸ்ட் சிஸ்டம் வசதிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஓட்டுநரின் அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களான ஏர் பேக், பார்க்கிங் சென்சார், கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. 
 
புதிய மெர்சிடிஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ.30.65 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. அதிகபட்சமாக இதன் டாப்-என்ட் மாடலின் விலை ரூ.36.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மெர்சிடிஸ் GLA மாடலின் AMG மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.